பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேரோட்ட நிகழ்வுககளில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த திரளான பக்தர்கள்.!
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் நடைபெற்ற தேரோட்ட நிகழ்வுககளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி தெய்வானைக்கும் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அடுத்த அரடாப்பட்டு பாலமுருகன் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் முதுகில் அலகு குத்தியும், அந்தரத்தில் தொங்கியபடி தேர் இழுத்தும் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
புதுச்சேரி பெரியகால்பட்டு ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு உடலில் அலகு குத்தி தேரில் தொங்கியபடி ஊர்வலமாக சென்று பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா வந்த சுப்பிரமணியர் - தெய்வானை அம்பாளை காண பக்தர்கள் குவிந்தனர்.
ராமேஸ்வரம் கரையூர் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திகடன் நிறைவேற்றினர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பச்சமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் முதுகு மற்றும் வாய் பகுதியில் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியவாறு தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
சென்னை அடுத்த போரூர் பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழக் கலவைகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகளை தரிசனம் செய்த பக்தர்கள் பூக்குழி இறங்கியும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
Comments